உள்ளூர் செய்திகள்

நுகர்வு கலாசாரத்தின் தாக்கம் கல்வித்துறையில் பிரதிபலிப்பு

கோத்தகிரி: கோத்தகிரி நுகர்வோர் பாதுகாப்பு குழு சார்பில், ஆசிரியர் பயிற்சி மையத்தில், நுகர்வோர் விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது. குன்னூர் நுகர்வோர் பாதுகாப்பு குழு தலைவர் ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் மனோகரன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசுகையில், "நுகர்வு கலாசாரத்தின் தாக்கம், சமீப காலமாக கல்வித்துறையிலும் பிரதிபலிப்பதால், கல்வி வியாபாரமாகிவிட்டது. ஆசிரியர்கள், தொழிலில் அர்ப்பணிப்பு உள்ளவர்களாக இருப்பார்கள் என, எதிர்பார்க்க முடியாது. இன்று கல்வியின் நோக்கமே, பணம் சம்பாதிப்பதுதான் என்றாகிவிட்டது. மக்களிடையே பரவியுள்ள பொருட் களை வாங்கி குவிக்கவேண்டும் என்ற வெறி, தனி மனிதனின் வாழ்வை நாசமாக்குவதுடன், சமுதாயத்தையும் சீரழிப்பதாக உள்ளது" என்றார். முன்னாள் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் பெள்ளி, தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் ராஜூ ஆகியோர் பேசினர். இதில், ஆசிரியர்கள், மாணவ மாணவியர் உட்பட பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்