புழுதிவாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில் வெள்ளநீர்!
சென்னை: புழுதிவாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளி வெள்ளநீரில் மிதக்கிறது. இப்பள்ளி மிகவும் தாழ்வான பகுதியில் உள்ளதால் ஒவ் வொரு மழை காலத்திலும் வெள்ளநீர் உள்ளே புகுந்து கடும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. பள்ளி நிர்வாகம் மற்றும் நகராட்சி சார்பில் அவ்வப்போது, மலை மண் கொட்டி சீரமைக்கப்பட்டாலும் மழைக்காலத்தில் வெள்ள பாதிப்பு குறைவதில்லை. சமீபத்தில் தொடர் மழையால் பள்ளி வளாகம் முழுவதும் வெள்ள நீரில் மிதக்கிறது. பள்ளியில் தேங்கியுள்ள வெள்ள நீரை வெளியேற்ற முறையான மழைநீர் வடிகால் கால் வாய் இல்லாததால் இப்பிரச்னை ஏற்பட்டு வந்தது. இதையடுத்து, உள்ளகரம்-புழுதிவாக்கம் நகராட்சி சார்பில் மழைநீர் கால்வாய் அமைக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து நகராட்சித் துணைத்தலைவர் மணிகண்டன் கூறுகையில், ‘புழுதிவாக்கம் அரசு பள்ளி மிகவும் தாழ்வான பகுதியில் அமைந்துள்ளது. ஒவ்வொரு மழைக்காலத்திலும் தேங்கும் மழைநீரை மோட்டார் மூலம் வெளியேற்றி வந்தோம். இம்முறை வெள்ள நீர் அதிகளவில் தேங்கியுள்ளது. முதலில் பள்ளி வளாகத்தில் தேங்கிய வெள்ள நீரை வெளியேற்றிவிட்டு கால்வாய் அமைக்கப்படுகிறது’ என்றார்.