ஹேண்ட்பால் விழிப்புணர்வு பேரணி கரூரில் துவக்கம்
கரூர்: தேசிய அளவிலான சப்-ஜூனியர் 30 வது பெண்கள் ஹேண்ட்பால் போட்டிகள் மற்றும் 15 வது சிறுவர் ஹேண்ட்பால் போட்டிகள் கரூர் பரணிபார்க் பள்ளி வளாகத்தில் நேற்று துவங்கியது. வரும் 29ம் தேதி வரை நடக்கவுள்ள ஹேண்ட்பால் போட்டியில் 26 மாநிலங்களை சேர்ந்த வீரர்கள் பங்கு பெறுகின்றனர். இதற்காக பரணிபார்க் பள்ளியில் ஐந்து ஆடுகளங்கள் அமைக்கப்பட்டுள்ளது. பெண்கள் பிரிவில் 75 போட்டிகளும், சிறுவர் பிரி வில் 50 போட்டிகளும் நடைபெறுகிறது. இரண்டு பிரிவுகளை சேர்ந்த 750 வீரர்கள் பங்கு பெறுகின்றனர். முன்னதாக, நேற்று மாலை கரூர் சி.எஸ்.ஐ., பள்ளி மைதானத்தில் துவங்கிய ஹேண்ட்பால் குறித்த விழிப்புணர்வு பேரணியை, மாநில ஹேண்ட்பால் சங்க தலைவரும், மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி.,யுமான ராமசுப்பிரமணியம் துவக்கி வைத்தார்.