உள்ளூர் செய்திகள்

யுனெஸ்கோ தலைவராக இரினா பொகோவா தேர்வு

டெல்லி: யுனெஸ்கோ அமைப்பின் தலைவராக, இரண்டாவது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார் இரினா பொகோவா. இவர் அடுத்த நான்காண்டுகளுக்கு இப்பொறுப்பில் இருப்பார். பல்கேரியா நாட்டைச் சேர்ந்த இரினா, கடந்த 2009ம் ஆண்டு, யுனெஸ்கோ தலைவராக முதன்முதலாக தேர்வு செய்யப்பட்டார். உலகின் பல்வேறான பல்கலைக்கழகங்களிடமிருந்து, பல கவுரவ டாக்டர் பட்டங்களை இவர் பெற்றுள்ளார். அவருக்கு தன் தாய்மொழியுடன் சேர்த்து, ஆங்கிலம், பிரெஞ்சு, ஸ்பானிஷ் மற்றும் ரஷ்யன் ஆகிய மொழிகளையும் நன்கு அறிந்தவர்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்