உள்ளூர் செய்திகள்

மேலாண்மை பட்டய பயிற்சி விண்ணப்பங்கள் விற்பனை

தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் மொரப்பூரில் உள்ள தர்மபுரி கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2014-15ம் ஆண்டு முழு நேர கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சிக்கான விண்ணப்பங்கள் விற்கப்படுகின்றன. இதுகுறித்து தர்மபுரி மாவட்ட மண்டல இணைப்பதிவாளர் ரேணுகா வெளியிட்ட செய்திக்குறிப்பு: முழு நேர கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சிக்கு மாணவர் சேர்க்கைக்கான குறைந்த பட்ச கல்வித்தகுதி பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பயிற்சியில் சேர்வதற்கு 2014 ஜூன் 1ம் தேதியன்று குறைந்தபட்சம் 17 வயது பூர்த்தி அடைந்தவர்களும், அதிகபட்சமாக 30 வயதுக்கு மேற்படாதவர்களும், தாழ்த்தப்பட்ட, மலை ஜாதியினருக்கு அதிகபட்ச வயது வரம்பு 33ம், முன்னாள் ராணுவத்தினருக்கு அதிகபட்ச வயது 45ம் இருத்தல் வேண்டும். பயிற்சி வகுப்புகள், திங்கள் முதல், வெள்ளிக்கிழமை வரை வாரத்தில் ஐந்து நாள் வீதம் ஒன்பது மாதத்துக்கு நடத்தப்படும். பயிற்சி கட்டணம் 9,560 ரூபாய் ஆகும். ஜூன் 2ம் தேதி முதல் ஜூலை 22ம் தேதி வரை விண்ணப்ப மனுக்கள் விற்பனை செய்யப்படுகிறது. விண்ணப்ப மனு மீள சமர்ப்பிக்க கடைசி நாள் 2014 ஜூலை 23ம் தேதி ஆகும். 2014 ஆகஸ்ட் 1ம் தேதி முதல் பயிற்சி துவங்குகிறது. இப்பயிற்சிக்கான விண்ணப்பங்கள், தர்மபுரி கூட்டுறவு மேலாண்மை நிலையம், மொரப்பூர், அரூர், தர்மபுரி என்ற முகவரியில் பெற்று கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்