உள்ளூர் செய்திகள்

பேராசிரியருக்கு சிறந்த ஆராய்ச்சிக் கட்டுரை விருது

திருப்புத்தூர்: திருப்புத்தூர் ஆறுமுகம்பிள்ளை சீதை அம்மாள் கல்லூரி பேராசிரியருக்கு எரிசக்தி வளங்களை பாதுகாப்பது குறித்த ஆய்வுக்கு விருது வழங்கப்பட்டுள்ளது. இக்கல்லூரியின் பொருளியல் துறை உதவிப் பேராசிரியர் மரிய ரத்தினம். இவர் எரிசக்தி வளங்களைப் பாதுகாப்பது குறித்து ஆய்வு செய்தார். தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையினருக்கு "சோலார் தெரு விளக்கு மற்றும் சோலார் லாந்தர் விளக்குகளின் பங்கு" என்ற தலைப்பில் ஆராய்ச்சிக் கட்டுரை சமர்ப்பித்திருந்தார். 2013-ம் ஆண்டிற்கான சுற்றுச்சூழல் தொடர்பான சிறந்த ஆராய்ச்சிக் கட்டுரை விருது வழங்கப்பட்டுள்ளது. உலகச் சுற்றுச்சூழல் தின விழாவில் தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் வெங்கடாச்சலம் வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்