உள்ளூர் செய்திகள்

மாநில செஸ் போட்டி பங்கேற்க அழைப்பு

கரூர்: கரூர் மாவட்ட செஸ் கழக தலைவர் நல்லசாமி வெளியிட்ட அறிக்கை: கரூர் கொங்கு வெள்ளாளர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் வரும் 29ம் தேதி காலை 9 மணிக்கு செஸ் போட்டி நடக்கிறது. 9, 12, 15 வயதுக்குட்பட்டவர்களுக்கும், ஓப்பன் போட்டியும் நடக்கிறது. ஒவ்வொரு பிரிவிலும் 10 பரிசுகள் வழங்கப்படுகிறது. மாநில சப் - ஜூனியர் தேர்வு போட்டிக்கு மட்டும் நான்கு சிறுவர்கள், நான்கு சிறுமிகள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இவர்கள், கோவை மகேந்திரா கல்லூரி வளாகத்தில் ஜூலை 2 முதல் 6ம் தேதி வரை நடைபெறும் செஸ் போட்டிக்கு கரூர் மாவட்டம் சார்பில் அனுப்பி வைக்கப்படுவர். செஸ் போட்டியில் பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள் கரூர் பஸ் ஸ்டாண்ட் அருகிலுள்ள ஸ்டார் ஸ்போர்ட்ஸ், டென் ஸ்போர்ட்ஸ் கடையில் வரும் 27ம் தேதிக்குள் முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும் தகவலுக்கு செயலாளர் சிவக்குமார் 9787960669 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்