மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு மருத்துவ மதிப்பீட்டு முகாம்
திருவள்ளூர்: அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பாக ஆறு முதல் 14 வயதுடைய மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் வரும் 7ம் தேதி முதல் நடக்கிறது. அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் சார்பாக ஆறு முதல் 14 வயதுடைய மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டம், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது. சுகாதார துறை அலுவலக கண்காணிப்பாளர், மருத்துவர் தயாளன், அனைவருக்கும் கல்வி இயக்க கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர் சுந்தரராஜன், துணை இயக்குநர் (பொது சுகாதாரம்) மற்றும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலக அலுவலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு ஆட்சியர் வீர ராகவ ராவ் தலைமை வகித்து பேசுகையில், மருத்துவ முகாம் நடைபெறும் அன்றே, தேசிய அடையாள அட்டை தேவைப்படும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கு வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என அறிவுறுத்தினார். முகாம் நடைபெறும் இடம், நாள் விவரம் நாள் - ஒன்றியம் - நடைபெறும் இடம் ஜூலை 7 திருவள்ளூர், கடம்பத்தூர் டி.இ.எல்.சி. நடுநிலைப் பள்ளி, திருவள்ளூர் ஜூலை 8 பூண்டி, எல்லாபுரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, ஊத்துக்கோட்டை ஜூலை 9 பூந்தமல்லி, வில்லிவாக்கம் நகராட்சி துவக்கப் பள்ளி, சத்தியமூர்த்தி நகர், ஆவடி ஜூலை 10 சோழவரம், புழல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, பாடியநல்லூர் ஜூலை 11 மீஞ்சூர், கும்மிடிப்பூண்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பொன்னேரி ஜூலை 12 திருத்தணி, திருவாலங்காடு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, திருத்தணி ஜூலை 14 பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, ஆர்.கே.பேட்டை.