உள்ளூர் செய்திகள்

இலவச தொழிற் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

விழுப்புரம்: விழுப்புரம் இந்தியன் வங்கி சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் சார்பில் இலவச தொழிற்பயிற்சி நடக்கிறது. விழுப்புரம் மாவட்ட இந்தியன் வங்கி சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் மூலம் 18 முதல் 45 வயது வரையுள்ள நபர்களுக்கு இலவச தொழில் முனைவோர் பயிற்சி அளிக்கப்படுகிறது. 2 முதல் 8 வாரங்கள் வரை நடக்கும் பயிற்சியில் பங்கேற்பவர்களுக்கு மதிய உணவு இலவசமாக வழங்கப்படுகிறது. இதில் ஜூலை மாதம் சணல் பொருட்கள் தயாரித்தல், உணவு பொருள் தயாரித்தல், அலங்கார குஷன், தலையணைகள் தயாரித்தல் உள்ளிட்ட பல பயிற்சிகள் துவங்கப்படுகிறது. இதற்கான விண்ணப்பங்கள் வரும் 9ம் தேதி வரை பயிற்சி மையத்தில் வழங்கப்படுகிறது. 18 முதல் 45 வயது வரையுள்ள நபர்கள் விண்ணப்பத்தை பெற்று பூர்த்தி செய்து தங்களது கல்வி சான்று நகல் மற்றும் அடை யாள அட்டை நகல்களை இணைத்து வழங்க வேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை இந்தியன் வங்கி சுய வேலைவாய்ப்பு நிறுவனம், நெ.5, அலமேலுபுரம், மாம்பழபட்டு சாலை, விழுப்புரம் என்ற முகவரியில் வழங்க வேண்டும். இவ்வாறு பயிற்சி மைய இயக்குனர் ஏலியம்மா ஆபி ரகாம் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்