சவுதி அரேபியாவில் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்பு
சென்னை: "சவுதி அரேபியாவின் சுகாதார அமைச்சகத்தின், அரசு மருத்துவமனைகளில் பணிபுரிய, மகளிர் செவிலியர்களிடம் இருந்து, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன" என, அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன் இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சவுதி அரேபியா, சுகாதார அமைச்சகத்தின், அரசு மருத்துவமனைகளில் பணிபுரிய, பி.எஸ்.சி., எம்.எஸ்.சி., தேர்ச்சியுடன், இரண்டு ஆண்டு பணி அனுபவம் பெற்ற, 30 வயதிற்குட்பட்ட மகளிர் செவிலியர்கள் தேவைப்படுகின்றனர். இவர்களை தேர்வு செய்ய, டில்லி, பெங்களூரு, கொச்சியில், வரும் 6ம் தேதியில் இருந்து 17ம் தேதி வரை, நேர்முகத் தேர்வு நடக்கிறது. பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்பில், 70 சதவீதம் மதிப்பெண் மற்றும் பி.எஸ்.சி.,யில், முதல் நிலையில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். தேர்ந்தெடுக்கப்படுவோருக்கு, பணி அனுபவத்திற்கேற்ப, ஊதியத்துடன் இலவச விமான டிக்கெட், இலவச இருப்பிடம் மற்றும் இதர சலுகைகள், வேலை அளிப்போரால் வழங்கப்படும். தகுதி உள்ளவர்கள், தங்களின் சுய விபரங்கள் அடங்கிய விண்ணப்பத்துடன், கல்வி, அனுபவம், பாஸ்போர்ட் ஆகியவற்றுடன், ஒரு புகைப்படத்தை இணைத்து, சென்னை, கிண்டி, திரு.வி.க. தொழிற்பேட்டையில் உள்ள அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்திற்கு பதிவுத் தபால் மூலமாக அனுப்பலாம். மேலும் விபரங்களுக்கு, 0442250226, 22505886 டெலிபோன் எண்களை தொடர்பு கொள்ளலாம்.