தேங்கும் மழைநீரால் பள்ளி மாணவர்கள் பாதிப்பு
ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் டேனிஷ் மிஷன் பள்ளிக்கு செல்லும் தெருவில் மழைநீர் தேங்கி நிற்பதால் மாணவர்கள் பாதிக்கின்றனர். ரிஷிவந்தியத்தில் டேனிஷ்மிஷன் பள்ளிக்கு செல்லும் தெரு கரடுமுரடாக இருப்பதால் மழை நீர் தேங்கி நிற்கிறது. மாணவர்கள் அவ்வழியாக பள்ளிக்கு செல்வதுடன் இடைவெளி நேரங்களில் அப்பகுதியில் விளையாடுகின்றனர். இதனால் மாணவர்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. தற்போது அனைத்து இடங்களிலும் மாணவர்களுக்கு டெங்கு காய்ச்சல் பரவி வருவதால் பெற்றோர்கள் அச்சமடைகின்றனர். அப்பகுதியிலேயே மக்கள் குப்பைகளை கொட்டுவதால் மாலை நேரங்களில் கொசுக்கள் உருவாகிறது. இப்பகுதியில் தேங்கி உள்ள நீரை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.