உள்ளூர் செய்திகள்

தொற்றுநோய் அபாயத்தில் ஆரம்பப் பள்ளி மாணவர்கள்

கொடிமங்கலம்: மதுரை மேலக்கால் ரோடு கொடிமங்கலத்தில் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளியில் 60க்கும் மேற்பட்ட குழந்தைகள் படிக்கின்றனர். இப்பள்ளி பகுதியில் கழிவுநீர் வாய்க்கால் இல்லை. அதனால் குடியிருப்பு பகுதியின் கழிவுநீர் பள்ளியை சூழ்ந்து குளமாகிறது. துர்நாற்றமெடுத்து கொசு பண்ணையாக காட்சியளிக்கிறது. கழிவுநீரில் நடந்து குழந்தைகள் பள்ளிக்கு செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தொற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்