தென்மண்டல அளவில் பள்ளிகளுக்கான கால்பந்து போட்டி
கோவை: தென்மண்டல அளவில் பள்ளிகளுக்கான கால்பந்து போட்டியில் தஞ்சாவூர் டான்போஸ்கோ பள்ளி வெற்றி பெற்றது. திருமலையாம்பாளையம் நேரு கல்வி நிறுவனங்கள் சார்பில், தென்மண்டல அளவில் பள்ளிகளுக்கான கால்பந்து போட்டி நேரு கலைஅறிவியல் கல்லுாரியில் நடக்கிறது. தமிழ்நாடு, கேரளா மாநிலங்களை சேர்ந்த, 28 பள்ளிகள் போட்டியில் பங்கேற்றன. முதல் சுற்று, முதல் போட்டியில், மதுரை செயின்ட் மேரீஸ் பள்ளி 4-0 கோல் கணக்கில் லிசிக்ஸ் மெட்ரிக் பள்ளியையும்; 2வது போட்டியில், கிருஷ்ணகிரி ஸ்போர்ஸ் ஹாஸ்டல் 1-0 கோல் கணக்கில் மலப்புரம் என்.என்.மெட்ரிக் பள்ளியையும்; 3வது போட்டியில், கோவை எஸ்.ஆர்.வி.,பள்ளி 3-0 கோல் கணக்கில் காயல்பட்டணம் எல்.கே.பள்ளியையும் வென்றன. நான்காவது போட்டியில், தஞ்சாவூர் டான்போஸ்கோ பள்ளி, 4-1 கோல் கணக்கில் கார்மல்கார்டன் பள்ளியையும்; 5வது போட்டியில், சேலம் லிட்டில்ப்ளவர் பள்ளி 3-0 கோல் கணக்கில் திருநெல்வேலி கிறிஸ்துராஜா பள்ளியையும்; 6வது போட்டியில், மதுரை ஸ்போர்ட்ஸ் ஹாஸ்டல் பள்ளி 3-0 கோல் கணக்கில் திருப்பூர் நஞ்சப்பா பள்ளியையும் வென்றன. இரண்டாவது சுற்று போட்டியில், தஞ்சாவூர் டான்போஸ்கோ பள்ளி 1-0 கோல் கணக்கில் மதுரை செயின்ட் மேரீஸ் பள்ளியை வென்றது. 2வது போட்டியில், கிருஷ்ணகிரி ஸ்போர்ட்ஸ் ஹாஸ்டல் 3-2 என்ற கோல் கணக்கில் பெனல்டி ஷூட்அவுட் முறையிலும்; 3வது போட்டியில், சேலம் லிட்டில் ப்ளவர் பள்ளி 4-3 கோல் கணக்கில் பெனல்டி ஷூட்அவுட் முறையில் மதுரை ஸ்போர்ட்ஸ் ஹாஸ்டல் பள்ளியை வென்றது.