உள்ளூர் செய்திகள்

குழந்தைகள் துன்புறுத்துதல் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

புதுச்சேரி: தவளக்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளியில், நாட்டு நலப்பணித் திட்டம், தேசிய பசுமைப்படை சார்பில், குழந்தைகள் துன்புறுத்துதல் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர் அய்யப்பன் வரவேற்றார். விரிவுரையாளர் கண்ணப்பன் தலைமை தாங்கினார். திட்ட அலுவலர் தமிழ்ச்செல்வி முன்னிலை வகித்தார். ஆசிரியர்கள் கல்யாணசுந்தரம், மதியழகன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். பேபி சாரா இல்ல நிர்வாகி முருகசாமி, பலநோக்கு சமூக சேவா சங்க நிர்வாகிகள் கோவிந்தராஜ், நாகவள்ளி ஆகி யோர் கருத்துரை வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்