பள்ளியில் சைக்கிள் ஸ்டாண்ட் அமைக்க கோரிக்கை
அவலூர்பேட்டை: அவலூர்பேட்டை ஆண்கள் பள்ளியில் சைக்கிள் ஸ்டாண்ட் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அவலூர்பேட்டை அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளியில் 750 க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். 300 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு படிக்கின்றனர். பள்ளி வளாகத்தில் திறந்த வெளியில் சைக்கிள்களை மாணவர்கள் நிறுத்துகின்றனர். காலையிலிருந்து மாலை வரை வெயில் மற்றும் மழையில் நிற்பதால் சைக்கிள்கள் வீணாகிறது. மாணவர்களுக்கு இலவசமாக அரசு சைக்கிள் வழங்குகிறது. அதை முறையாக நிறுத்த பாதுகாப்பான ஸ்டாண்ட் அமைக்க பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.