உள்ளூர் செய்திகள்

மாவட்ட அளவில் கல்லுாரிகளுக்கான கிரிக்கெட் போட்டி

கோவை: மாவட்ட அளவில் கலை அறிவியல் மற்றும் இன்ஜி., கல்லுாரிகளுக்கான கிரிக்கெட் போட்டி நாளை முதல் (ஜனவரி 21) துவங்குகிறது. கோயம்புத்துார் மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் 6வது ஆண்டு அக் ஷயா இன்ஜி.,தொழில்நுட்ப கல்லுாரி கோப்பை அனைத்து கலை அறிவியல் மற்றும் இன்ஜி., கல்லுாரிகளுக்கிடையே நாக்அவுட் முறையில் போட்டிகள் எஸ்.என்.ஆர்., கலை அறிவியல் கல்லுாரி மற்றும் கோவை தொழில்நுட்ப கல்லுாரியில் நடக்கின்றன. 40 கல்லுாரிகள் பங்கேற்கும் போட்டியில் ஏ-குழுவில் 20 கல்லுாரிகளும், பி - குழுவில் 20 அணிகளுமாக பிரிக்கப்பட்டுள்ளன. போட்டிகள் 21ம் தேதி முதல் 30ம் தேதி வரை நடக்கின்றன. இத்தகவலை மாவட்ட கிரிக்கெட் சங்க செயலாளர் கவுதமன் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்