உள்ளூர் செய்திகள்

விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு

கோவை: கோவை கிருஷ்ணா கல்லூரியில் நடந்த விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. கோவை ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழிற்நுட்பக் கல்லூரியில், கிருஷ்ணா கோப்பைக்கான, இறுதிநாள் போட்டி நடந்தது. ஆண்களுக்கான டேபிள் டென்னிசில், குமரகுரு கல்லூரியும், ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியும் விளையாடியதில், குமரகுரு கல்லூரியும், பெண்கள் பிரிவில், ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரி, குமரகுரு கல்லூரி அணிகள் மோதியதில், ஸ்ரீ கிருஷ்ணா அணி வெற்றி பெற்றன. பெண்களுக்கான இறகுப்பந்தில், குமரகுரு கல்லூரியும், கற்பகம் பொறியியல் கல்லூரியும் மோதிய ஆட்டத்தில், குமரகுரு அணி வெற்றி பெற்றது. ஆண்களுக்கான கூடைப்பந்தில், சி.ஐ.டி., அணியும், வாலிபால் போட்டியில் கலைஞர் கருணாநிதி கல்லூரி அணியும் வென்றன. கால்பந்து போட்டியில், குமரகுரு அணி வென்றது. வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பை வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்