உள்ளூர் செய்திகள்

சென்னை பல்கலையின் எம்.பில். தேர்வு முடிவுகள்

சென்னை: சென்னை பல்கலையின், எம்.பில்., தேர்வு முடிவுகள் இன்று(பிப்ரவரி 18) வெளியாகின்றன. இதுகுறித்து, சென்னை பல்கலை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சென்னை பல்கலையில், கடந்த 2014ம் ஆண்டு நடந்த எம்.பில்., தேர்வுக்கான முடிவுகள் இன்று வெளியாகிறது. வரும் ஆகஸ்ட்டில் நடைபெற உள்ள, எம்.பில்., தேர்வுக்காக, இப்போது விண்ணப்பிக்கலாம்; வரும் மே 29ம் தேதி, விண்ணப்பிக்க கடைசி நாள். அதே தேர்வுக்கு, அபராதத் தொகையுடன் விண்ணப்பிக்க கடைசி நாள் வரும் ஜூன் 11ம் தேதி. எம்.பில்., தேர்வுக்கான விண்ணப்பத்தை, பல்கலையின் இணையதளமான www.unom.ac.inல் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்