உள்ளூர் செய்திகள்

தலைமை ஆசிரியருக்கு தலைமை திறன் பயிற்சி

ஈரோடு: பெருந்துறையில் உள்ள மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனம் சார்பில், நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான தலைமை திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டது. கொடுமுடி, ஈரோடு யூனியன்களை சேர்ந்த நடுநிலை பள்ளி ஆசிரியர்கள், 153 பேருக்கு இரண்டு பேட்ச்களாக, ஈரோட்டில் பயிற்சி அளிக்கப்பட்டது. உதவி தொடக்க கல்வி அலுவலர் கலைச் செல்வன் பயிற்சி வகுப்பை துவக்கி வைத்தார். மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் ஜெயந்தி பங்கேற்றார். கருத்தாளர்களாக, இந்நிறுவனத்தை சேர்ந்த நான்கு பேர் பயிற்சி அளித்தனர். தலைமை ஆசிரியர்களுக்கு ஒரு நாள் பயிற்சி அளிக்கப்பட்டது. மாணவ, மாணவியருக்கு எளிதில் புரியும் வகையில் பாடங்களை நடத்துவது, குறித்து விளக்கமளிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்