உள்ளூர் செய்திகள்

ஆசிரியைகளுக்கு கோட்; அரசு பள்ளியில் அசத்தல்

மதுரை: மதுரை மாவட்டம் வன்னிவேலம்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில், ஆசிரியைகள் கோட் அணியும் அறிமுக விழா நேற்று நடந்தது. முதன்மை கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி துவக்கி வைத்து பேசுகையில், டாக்டர், வழக்கறிஞர்கள் போன்று அரசு பள்ளி ஆசிரியைகளுக்கும் பிரத்யேக கோட் அணியும் இந்த முயற்சி, ஆசிரியைகளுக்கு கூடுதல் அங்கீகாரத்தையும், ஆளுமை பண்பையும் அதிகரிக்கும், என்றார். உசிலம்பட்டி கல்வி அலுவலர் ரேணுகா முன்னிலை வகித்தார். பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் சுப்புராஜ், கிராமக் கல்விக் குழுத் தலைவர் லட்சுமணன், திருநகர் சபிதாபாய் பள்ளி தலைமையாசிரியர் ராஜகோபால் உட்பட பலர் பங்கேற்றனர். தலைமையாசிரியர் பாஸ்கரன் ஏற்பாடு செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்