உள்ளூர் செய்திகள்

சத்துணவு மைய உதவியாளர் பணிக்கு விண்ணப்பம்

சிவகங்கை: பள்ளி சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 189 சமையல் உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது, என கலெக்டர் எஸ்.மலர்விழி தெரிவித்தார். அவர் கூறியதாவது: சமையலர்கள் நேரடியாக நியமிக்கப்பட உள்ளனர். இனச்சுழற்சி ஒதுக்கீடு விபரத்தை ஊராட்சி ஒன்றியம், நகராட்சி அலு வலகங்களில் தெரிந்து கொள்ளலாம். 25 மாணவர்களுக்கு குறைவாக உள்ள பள்ளி சத்துணவு மையங்களுக்கு சமையல் உதவியாளர் பணியிடம் நிரப்பவில்லை. பொது, தாழ்த்தப்பட்டோர் 30.09.2015 அன்று வயது 21 முதல் 40க்குள். பழங்குடியினர் 18 முதல் 40க்குள், விதவை மற்றும் கணவரால் கைவிடப்பட்டோர் 20 முதல் 40க்குள் இருத்தல் வேண்டும். பணியிடத்திற்கும், வீட்டிற்கும் 3 கி.மீ.,தூரம் மட்டுமே இருத்தல் வேண்டும். பொது மற்றும் தாழ்த்தப்பட்டோர் 5ம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி. பழங் குடியினர் எழுத படிக்க தெரிந்தால் போதும். அக்.,30ம் தேதி வரை கிராமங் களை சேர்ந்தோர் அந்தந்த ஊராட்சி ஒன்றிய ஆணையருக்கும், நகராட்சி பகுதியினர் நகராட்சி ஆணையருக்கும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் அந்தந்த ஊராட்சி ஒன்றியம், நகராட்சியில் கிடைக்கும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்