உள்ளூர் செய்திகள்

சட்டக்கல்லூரி மாணவர்கள் மோதல்; இருவர் காயம்

பாரிமுனை: சட்டக் கல்லுாரியில், கடந்த ௯ம் தேதியன்று, கலாசார விழா நடைபெற்றது. அப்போது இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்கள் சிலருக்கும், நான்காம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கும் தகராறு ஏற்பட்டது. இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்கள் சிலர், நேற்று முன்தினம் நான்காம் ஆண்டு படிக்கும் மாணவர்களை, கல்லுாரியின் வளாகத்தில் தாக்கினர். காயமடைந்த, 25 வயது உடைய இருவர், ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். அவர்கள் கொடுத்த புகாரையடுத்து, 26 முதல் 28 வயது உடைய, மூன்று மாணவர்களை, எஸ்பிளனேடு போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்