பள்ளி ஆசிரியர்களுக்கு எஜூகாம்ப் பயிற்சி வகுப்பு
கோவை: எஜூகாம்ப் சார்பில், ஓட்டல் சி.ஏ.ஜி. பிரைடில் ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்பு நடந்தது. கற்பித்தலில் பள்ளிகள் எதிர்நோக்கும் சவால்கள் என்ற தலைப்பில் இப்பயிற்சி வகுப்பு நடந்தது. இதில், எஜூகாம்ப் சி.இ.ஓ., கிருஷ்ணமூர்த்தி பேசுகையில், இந்த பயிற்சி வகுப்பு பள்ளி முதல்வர்களின் நலனுக்காக நடத்தப்படுகிறது. தொழில்நுட்பத்தில் நவீன நுட்பங்களை, மாணவர்களிடம் எடுத்துச்செல்ல வேண்டும். இன்றைய மாற்றுத்துக்கு தேவையான கற்றல் முறை குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சியளிக்கப்படும், என்றார். இந்த பயிற்சி வகுப்பில், 50க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.