பள்ளி ஆசிரியர்களுக்கு கற்பித்தல் திறன் பயிற்சி
வாலாஜாபாத்: தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, தமிழ் எழுத்துக்களின் கற்பித்தல் திறன் வளர்ப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், வாலாஜாபாத் வட்டார வள மைய பயிற்சி அரங்கத்தில், நேற்று முன்தினம் நடந்த பயிற்சி கூட்டத்திற்கு, ஆசிரியர் பயிற்றுனர் பிரபாவதி தலைமை தாங்கினார். ஆசிரியர் பயிற்றுனர் தர்மபிரபு, எழுத்துக்களின் ஒலி உச்சரிப்பு மற்றும் எழுத்துகளின் தொடக்க நிலை ஆகியவை பற்றி ஆசிரியர்கள் இடையே விளக்கி கூறினார். இந்த பயிற்சி முகாமில், 43 பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.