தேசிய கல்வி விதிமுறை வரைவு சமர்பிப்பு
பெங்களூரு: தேசிய கல்வி விதிமுறை வரைவு தயாரிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவின் கருத்துக்கள், ஆலோசனைகள் இன்று மத்திய அமைச்சரிடம் கொடுக்கப்படும், என, துவக்கக் கல்வித்துறை அமைச்சர் கிம்மனே ரத்னாகர் தெரிவித்தார்.பெங்களூரு சித்ரகலா பரிஷத்தில், நேற்று முதல், வரும் நவ., 1ம் தேதி வரை நடக்கும், ஓவியக்கண்காட்சியை அமைச்சர் கிம்மனே ரத்னாகர் துவக்கி வைத்த பின், நிருபர்களிடம் கூறியதாவது:மத்திய அரசு, நாட்டின் பல மாநிலங்களிடம், கல்வி விதிமுறைகள் தொடர்பாக கருத்து, ஆலோசனைகளை கேட்டுள்ளது. மத்திய மனித வளத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, இன்று பெங்களூரு வருகிறார். அவரிடம் மாநிலத்தின் கருத்துக்கள் தெரிவிக்கப்படும். மாநிலத்தின் ஓவிய கலைப்பள்ளிகளில், அரசு ஆசிரியர்கள் இருந்தனர். சில குழப்பங்களால், ஆசிரியர்களை நியமிக்க முடியவில்லை. விரைவில் ஓவிய பயிற்சி ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர். இவ்வாறு அவர் கூறினார்.