உள்ளூர் செய்திகள்

அரசு கலை கல்லூரிக்கு புதிய முதல்வர்

வியாசர்பாடி அரசு கலைக் கல்லுாரி முதல்வராக இருந்த பேராசிரியர் சசிகலா, மூன்று மாதங்களுக்கு முன், சென்னை நந்தனம் அரசு கல்லுாரி முதல்வராக மாற்றப்பட்டார். அதையடுத்து, வியாசர்பாடி கல்லுாரி ஆங்கிலப் பேராசிரியர் நவமணி, முதல்வர் பொறுப்பேற்றார். ஆனால், அவர் பொறுப்பேற்ற அன்றே, மாணவர் சேர்க்கைக்காக லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் சிக்கினார். அதையடுத்து அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். பின், பேராசிரியர் ரவிச்சந்திரன் முதல்வர் பொறுப்பில் நியமிக்கப்பட்டு, கல்லுாரி செயல்பட்டது.இந்த நிலையில், புதிய முதல்வராக மாநிலக் கல்லுாரி பேராசிரியர் சந்திரா நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். வரும், மே மாதம் ஓய்வு பெறவுள்ள இவர், இன்னும் ஏழு மாதங்கள் முதல்வராக இருப்பார் என, கல்லுாரி இயக்கக வட்டாரங்கள் தெரிவித்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்