வேளாண் பல்கலையில் தேனீ வளர்ப்பு பயிற்சி
கோவை: தேனீ வளர்ப்பு குறித்த ஒரு நாள் பயிற்சி முகாம், தமிழ்நாடு வேளாண் பல்கலையில் நவ.,6ல் நடக்கிறது. காலை, 10:00 முதல், மாலை, 5:00 மணி வரை நடக்கும் பயிற்சியில், தேனீ இனங்களை கண்டுபிடித்தல், பெட்டிகளில் தேனீ வளர்க்கும் முறை மற்றும் நிர்வாகம், தேனீக்கு உணவு தரும் பயிர்கள் மற்றும் மகரந்த சேர்க்கை மூலம் மகசூல் அதிகரிக்கும் பயிர்களின் விவரம், தேனைப் பிரித்தெடுத்தல் மற்றும் நோய் நிர்வாகம் உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. இம்மாதத்திற்கான பயிற்சி முகாம், நவ.,6ல் நடக்கவுள்ளதால், விருப்பமுள்ளோர், பயிற்சி நாளன்று, காலை, 9:00 மணிக்கு வேளாண் பல்கலையின் பூச்சியியல் துறைக்கு வரலாம். இதற்கு கட்டணமாக, 250 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. பயிற்சி நிறைவில் சான்றிதழ் வழங்கப்படும். விபரங்களுக்கு, 0422 6611214 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.