உள்ளூர் செய்திகள்

எல்.டி.சி., எழுத்து தேர்வு முடிவுகள் வெளியீடு

புதுச்சேரி: ஜிப்மர் எல்.டி.சி., போட்டி எழுத்து தேர்வு ரிசல்ட் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. ஜிப்மர் மருத்துவமனையில் காலியாக உள்ள 18 எல்.டி.சி., பணியிடங்களுக்கு நேற்று முன்தினம் தேர்வு நடந்தது. விண்ணப்பித்த 4125 பேரில், 3122 பேர் தேர்வு எழுதினர். 1003 பேர் ஆப்சென்டாகி இருந்தனர். தேர்வு முடிவுகளை நேற்று ஜிப்மர் இயக்குனர் பரிஜா வெளியிட்டார். தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்து வெற்றிப் பெற்ற 191 பேரின் பெயர்கள் இடம் பெற்றன.எழுத்து தேர்வில் வெற்றிப் பெற்றவர்கள் இன்று 3ம் தேதி காலை 9 மணிக்கு ஜிப்மர் நிர்வாக கட்டடம் என்.டி.டி.சி., ஹால் 4-வது மாடியில் நடக்கும் ஸ்கில் தேர்வில் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என, அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஸ்கில் தேர்விற்கு வருவோர், ஒரிஜனல் ஹால்டிக்கெட், அடையாள அட்டை எடுத்து வரவேண்டும். தேர்வர்கள் மொபைல் போன், எலக்ரானிக்ஸ் பொருட்கள், கைப்பை, எழுதுபொருட்கள், ரப்பர் எடுத்து வரக்கூடாது.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்