பள்ளி மாணவர்களுக்கு அறிவியல் திறனறி தேர்வு
கோவை: அவிநாசி ரோடு, மண்டல அறிவியல் மையத்தில், பள்ளி மாணவர்களுக்கான அறிவியல் திறனறி தேர்வு வரும், 15ல் நடக்கிறது. தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம் சார்பில், மாணவர்களுக்கான அறிவு சார்ந்த போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில், ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான போட்டி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், பொது அறிவியல், பாடபுத்தக கேள்விகள் இடம்பெற உள்ளன. தேர்வு, காலை, 10:30 முதல் மதியம், 12:00 மணி வரை நடக்கும். பங்கேற்க விருப்பமுள்ள மாணவர்கள் வரும், 12ம் தேதிக்குள், மண்டல அறிவியல் மையத்தில், நுழைவுக் கட்டணம் செலுத்தி பெயரை முன்பதிவு செய்து கொள்ளலாம்.