உள்ளூர் செய்திகள்

மாணவியரிடம் சில்மிஷம்; தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்

காரிமங்கலம்: பள்ளி மாணவியரிடம் சில்மிஷம் செய்த அரசு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்த முக்குளம் கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு, 25 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். இங்கு தலைமை ஆசிரியராக பணியாற்றும் சந்திரசேகர், 56, மாணவியரிடம் சில்மிஷம் செய்து வந்ததால், மாணவியர் பள்ளிக்கு செல்லாமல் இருந்துள்ளனர்.பெற்றோர்கள், கடந்த, 16ம் தேதி பள்ளிக்கு சென்று தலைமை ஆசிரியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.இது குறித்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் உட்பட அதிகாரிகள், தலைமை ஆசிரியர் மற்றும் மாணவியரிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் தலைமை ஆசிரியர் சில்மிஷம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரை சஸ்பெண்ட் செய்து, மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் உத்தர விட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்