உள்ளூர் செய்திகள்

மிஷன் துணை செயலாளர் பள்ளியில் ஆய்வு

விழுப்புரம்: விழுப்புரம் ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியை, ராமகிருஷ்ணா மடம் மற்றும் மிஷன் நிர்வாகி, ஆய்வு செய்தார். விழுப்புரம் பூந்தோட்டத்திலுள்ள, ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியை, கொல்கத்தா, பேலுார் ராமகிருஷ்ணா மடம் மற்றும் மிஷன் துணை செயலாளர் சுவிரானந்தாஜி மகராஜ், நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தனர். முன்னதாக பள்ளி முதல்வர் பாட்சா வரவேற்றார். சென்னை ராமகிருஷ்ணா மிஷன் விவேகானந்தா கல்லுாரி செயலாளர் சுகதேவானந்தா மகராஜ் அறிமுகவுரையாற்றினார். சென்னை மயிலாப்பூர் ராமகிருஷ்ணா மடத்தின் மேலாளர் விமூர்த்தானந்தாஜி மகராஜ், செங்கல்பட்டு ராமகிருஷ்ணா மடத்தின் செயலாளர் சத்யஞானாந்தாஜி மகராஜ் ஆகியோர் அருளாசி வழங்கினர். பள்ளியின் செயலாளர் பழனிவேலு, பொருளாளர் லோகையன் உடனிருந்தனர். சாலாமேடு பள்ளி முதல்வர் பெரியதுரை நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்