உள்ளூர் செய்திகள்

பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி முகாம்

விழுப்புரம்: மங்களபுரம் பி.எம்.டி., தொண்டு நிறுவனத்தில், பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி முகாம் நடந்தது. பி.எம்.டி., தொண்டு நிறுவனத்தின், சேவைப் பகுதியிலுள்ள 22 உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் படித்து, தேர்ச்சி பெற தவறிய, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கான வழிகாட்டும் சிறப்பு பயிற்சி முகாம் நடந்தது. மங்களபுரத்திலுள்ள பயிற்சி மையத்தில் நடந்த முகாமிற்கு, நிறுவனத் தலைவர் ஆரோக்கியசாமி தலைமை தாங்கி, சிறப்புரையாற்றினார். ஆசிரியர் ஜார்ஜ் தலைமையில், 11 ஆசிரியர்கள் கொண்ட குழுவினர், மாணவர்களுக்கு பயிற்சிகளை அளித்தனர். இதில் கலந்து கொண்ட 130 மாணவ, மாணவிகளுக்கு எழுது பொருட்கள், நோட்டுப் புத்தகம் வழங்கப்பட்டன. முகாம் ஏற்பாடுகளை பி.எம்.டி., பணியாளர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்