புனே திரைப்பட கல்லூரிக்கு புதிய இயக்குனர்
புதுடில்லி, புனேயில் உள்ள திரைப்பட கல்லுாரியின் புதிய இயக்குனராக, மத்திய அரசு அதிகாரி பூபேந்திர கைன்தோலா நியமிக்கப்பட்டு உள்ளார். மஹாராஷ்டிர மாநிலம் புனேயில், மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ், தன்னாட்சி பெற்ற அமைப்பாக திரைபடக் கல்லுாரி செயல்பட்டு வருகிறது. அதன் தலைவராக, பா.ஜ.,வைச் சேர்ந்த, டிவி நடிகர் கஜேந்திர சவுகான், கடந்த ஆண்டு நியமிக்கப்பட்டார். அங்குள்ள மாணவர்கள், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். இருப்பினும் அவர், அந்த பதவியில் தொடர்ந்து வருகிறார். இந்நிலையில், திரைப்பட கல்லுாரியின் இயக்குனர் பொறுப்புக்கு, ஐ.ஐ.எஸ்., அதிகாரியான பூபேந்திர கைன்தோலாவை, மத்திய அரசு நியமித்துள்ளது. அவர், மூன்றாண்டுகளுக்கு அந்த பதவி வகிப்பார்.