கல்லூரியில் மாணவர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கல்
பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகேயுள்ள பூசாரிப்பட்டி பொள்ளாச்சி இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஜினியரிங் அண்டு டெக்னாலஜி கல்லுாரியில், பணி நியமன ஆணை வழங்கும் விழா, முன்னாள் மாணவர் இணைப்புக்கூட்டம், இறுதியாண்டு மாணவர்களுக்கான பிரிவு உபசார விழா என முப்பெரும் விழா கல்லுாரி வளாகத்தில் நடந்தது. ஹயக்கிரீவா கல்வி அறக்கட்டளையின் அறங்காவலர் கவுதம் சிவன் வரவேற்றார். செயலாளர் அருள்மொழி தலைமை வகித்தார். கல்லுாரியின் முதல்வர் தனபால கிருஷ்ணன், முன்னாள் மாணவர் இணைப்பு கூட்டத்தை துவக்கி வைத்தார். கல்லுாரியின் வேலை வாய்ப்புத்துறை இயக்குனர் பிரபாகரன், பல்வேறு நிறுவனங்களில் வேலைவாய்ப்பினை எட்டிய, 86 சதவீத மாணவர்களின் பட்டியலை படித்தார். தனியார் நிறுவனத்தை சேர்ந்த பாலாஜி தயாளன், சினிபிரியா, கல்லுாரி தலைவர் ரத்தினம் பேசினர். மாணவர்கள், பெற்றோரின் கருத்துக்களும் கேட்டறியப்பட்டன. இறுதியாண்டு கட்டடவியல் துறை மாணவர் கிங்ஸ்ஸின் நன்றி கூறினார்.