நாகர் பப்ளிக் பள்ளியில் கல்வித்துறை கருத்தரங்கம்
விழுப்புரம்: விழுப்புரம் நாகர் பப்ளிக் பள்ளி சார்பில், கல்வித் துறை சவால்கள் மற்றும் எதிர்கால வாய்ப்புகள் குறித்த கருத்தரங்கம் நடந்தது. விழுப்புரம் ஆனந்தா திருமண மண்டபத்தில் நடந்த கருத்தரங்கிற்கு, மகரிஷி வித்யா மந்திர் பள்ளி குழுமத்தின் டீன் மற்றும் இயக்குனர் நமச்சிவாயம் தலைமை தாங்கி பேசினார். சி.பி.எஸ்.சி., தனியார் பள்ளி நிறுவனங்களின் கூட்டமைப்பு பொது செயலாளர் போஸ், கவி பாரதி பள்ளி தாளாளர் பவானி சங்கர், லாலாஜி மேமோரியல் ஒமேகா இன்டர்நேஷனல் பள்ளியின் நிறுவனர் ராம்பிரசாத், வாழ்க்கைக்கான கல்வி மற்றும் கர்நாடக இசைக் கலைஞர் ராம்பிரசாத், கல்வியாளர் கணேஷ் ஆகியோர் சிறப்புரையாற்றினர். இதில் சி.பி.எஸ்.சி., பாடத்திட்டத்தின் சாதக அம்சங்கள் மற்றும் மாணவர்களை உருவாக்குவதில் திறன் வளர்த்தல் பயிற்சிகள் குறித்து கல்வியாளர்கள் சிறப்புரையாற்றினர். இதனை தொடர்ந்து மாணவர்களுடன், கல்வியாளர்களின் கலந்துரையாடல் நடந்தது.