பி.எஸ்.ஆர். இன்ஜினியரிங் கல்லூரியில் பயிற்சி வகுப்பு
வெம்பக்கோட்டை: சிவகாசி பி.எஸ்.ஆர். இன்ஜினியரிங் கல்லுாரியில் மேலான்மைத் துறை மற்றும் பயிற்சி வேலைவாய்ப்புத் துறை சார்பில் மனித வளத் துறையில் வேலைவாய்ப்புகள் என்ற தலைப்பில் பயிற்சி வகுப்பு நடந்தது. கல்லுாரி தாளாளர் சோலைசாமி தலைமை வகித்தார். இயக்குனர் விக்னேஸ்வரி முன்னிலை வகித்தார். துறைத் தலைவர் ராஜமன்னார் வரவேற்றார்.முதல்வர் விஷ்ணுராம் தொடங்கி வைத்தார். மனித வளத்துறை பயிற்சியாளர்கள் பாலாஜி ராமசுப்பு, லெஸ்லி, வாசன் பேசினர். வேலைவாய்ப்பு துறை டீன் பானுப்பிரியா நன்றி கூறினார்.