பருவமழை தீவிரம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. நேற்று பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.கேரளாவில் தென்மேற்கு பருவமழைபெய்து வரும் நிலையில் குமரி மாவட்டத்திலும் அந்த மழை வலுத்துள்ளது. கடந்த நான்கு நாட்களாக பெய்து வரும் மழை நேற்று முன்தினம் இரவு முதல் மேலும் தீவிரம் அடைந்தது. நேற்று காலையிலும் விடாது அடை மழை பெய்ததால் பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.