பிரிட்டனில் வேலைகளை உருவாக்கும் இந்திய நிறுவனங்கள்
தற்போதைய பொருளாதாரச் சூழலிலும் இந்திய நிறுவனங்கள் பிரிட்டன் போன்ற மேலை நாடுகளில் முதலீடு செய்வது தொடந்து அதிகரித்து வருகிறது. எனினும் முன்பு போல மிகப் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களில் அல்லாது மத்திய தர மற்றும் சிறிய அளவிலான தொழிற் நிறுவனங்களில் இந்திய நிறுவனங்கள் தற்போது முதலீடு செய்து வருகின்றன. இதனால் வெளிநாடுகளில், குறிப்பாக பிரிட்டன் போன்ற நாடுகளில் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கக் கூடிய நிறுவனங்களாக இந்திய நிறுவனங்கள் விளங்குகின்றன. அமெரிக்காவிற்கு அடுத்து பிரிட்டனில் தான் இந்திய நிறுவனங்கள் அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்குகின்றன. தற்போது பிரிட்டன் கடுமையான வேலையில்லாத் திண்டாட்டத்தில் இருப்பதால் இந்திய நிறுவனங்களுக்கு அங்கு அதிக வரவேற்பு இருக்கிறது.