அமெரிக்க கண்காட்சியில் தமிழக மாணவன் சாதனை
கடந்தாண்டு கோல்கட்டாவில் நடந்த அறிவியல் ஆராய்ச்சி மற்றும் புத்தாகத்திற்கான தேசிய கண்காட்சியில், தமிழகத்தின் செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளி மாணவன் விஷ்ணு ஜெயப்பிரகாஷ் தேசிய விருதைப் பெற்றார். இதைத்தொடர்ந்து, விஷ்ணு எட்டு மாணவர்கள் கொண்ட குழுவுடன், சென்ற மாதம் அமெரிக்காவில் நவோடாவில் நடைபெற்ற உலகின் மாபெரும் ப்ரீகாலேஜ் சயின்ஸ் கண்காட்சியில் இந்தியாவின் பிரதிநிதியாக கலந்து கொண்டார். 57 நாடுகள் கலந்து கொண்ட இந்த கண்காட்சியில், விஷ்ணு இரண்டாமிடத்தைப் பெற்றார். பதக்கத்துடன் 1,500 அமெரிக்க டாலர் வழங்கப்பட்டது. இந்த கண்காட்சியில் விஷ்ணுவுடன் கலந்து கொண்ட இந்தியக் குழுவினர் பல்வேறு பரிசுகளைப் பெற்றனர். சென்னை ஐ.ஐ.டி., பவுதிகத்துறை பேராசிரியர் நடராஜன் வழிகாட்டுதலில் விஷ்ணு ஆய்வுப் பணி மேற்கொண்டார். நவோடா பல்கலை அவரது இளங்கலை பட்டப்படிப்புக்கு ஸ்காலர்ஷிப் அளிக்க முன்வந்துள்ளது. இவர் பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.