உள்ளூர் செய்திகள்

தினமலர் ‘மொபைல் பேப்பர்’: ஆயிரக்கணக்கானோர் ஆர்வம்

எந்த இடத்திலிருந்தும், எந்த நேரத்திலும், ஜி.பி.ஆர்.எஸ்., வசதியுள்ள எந்த மொபைல் போன் வழியாகவும், தினமலர் மொபைல் பேப்பரை படித்துக் கொள்ளும் வசதி  ஜூலை 20ம் தேதி துவக்கப்பட்டது. இந்த வசதியை, வாசகர்கள் பெரிய அளவில் வரவேற்றுள்ளனர். தமிழ் பத்திரிகை உலகில் முதல்முறையாக இடம்பெற்றுள்ள, ‘மொபைல் பேப்பர்’ குறித்து, வாசகர்கள் தெரிவித்துள்ள கருத்துக்கள் சில: கங்காசூடன், கடலூர்: இந்த அவசரமான உலகில் மொபைல் போனில், தமிழிலேயே செய்தியை படித்துக் கொள்ளலாம். சம்பவங்கள் நடந்த உடன் செய்திகள் எங்கள் கைகளுக்கே தேடி வரும் வசதி பிரமிக்க வைக்கிறது. ஸ்ரீதர், சென்னை: இதுபோன்ற வசதியைத்தான் நீண்ட காலமாக எதிர்பார்த்திருந்தேன். சரியான நேரத்தில் வழங்கிய தினமலர் இதழுக்கு நன்றி. கதிர், சூரத்: இதுபோன்ற அருமையான சேவையை இதுவரை நான் பார்த்ததில்லை. எங்களைப் போன்று வெளியூரில் உள்ளவர்களுக்கு இது வரப்பிரசாதம். செந்தில்: தினமலர் இதழை கையடக்க மொபைலில் பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. திருப்பதி: நாங்கள் எங்கிருந்தாலும் செய்திகளை உடனடியாக தெரிந்து கொள்ள முடியும். தினமலர் சாதித்துவிட்டது. இதுபோன்ற கருத்துக்கள் தொடர்ந்து வந்து கொண்டே உள்ளன. வாசகர்களின் அமோக ஆதரவுக்கு நன்றி. எப்படி பெறலாம்: உங்கள் மொபைல் போனில், ஜி.பி.ஆர்.எஸ்., வசதி இருக்கிறதா என்பதை பாருங்கள். இந்த வசதியை வெவ்வேறு மொபைல் போன் சேவை வழங்கும் நிறுவனங்கள் வெவ்வேறு பெயர்களில் வைத்துள்ளன. உதாரணமாக: ஏர்டெல்- ஏர்டெல் லைவ், வோடபோன் - வோடபோன் லைவ், ஏர்செல் - பாக்கெட் இன்டர்நெட், பி.எஸ்.என்.எல்., - பி.எஸ்.என்.எல்., வாப், ஐடியா - ஐடியா பிரெஷ், ரிலையன்ஸ் ஜி.எஸ்.எம்., - ரிலையன்ஸ். உங்கள் மொபைலில் ஜி.பி.ஆர்.எஸ்., வசதி இல்லாவிட்டால், ‘கஸ்டமர் கேர்’ எண்ணை தொடர்பு கொண்டு, ஆக்டிவேட் செய்யுங்கள். அதன்பின்னர், ஈடிணச்ட்ச்டூச்ணூ என்று ‘டைப்’ செய்து 57333 எனும் எண்ணுக்கு எஸ்.எம்.எஸ்., அனுப்புங்கள். பதில் எஸ்.எம்.எஸ்., வரும். எஸ்.எம்.எஸ்., ‘ஆப்சன்’ வழியாக http://newshunt.com/dinamalar எனும் இணைப்பிலிருந்து மொபைல் பேப்பரை டவுண்லோட் செய்யுங்கள். ஒருமுறை டவுண்லோட் செய்துவிட்டாலே போதும். மொபைல் பேப்பரை எப்போதெல்லாம் பார்க்க வேண்டுமோ, அப்போதெல்லாம் ‘அப்ளிகேஷன்’ பகுதிக்கு சென்று செய்திகளை படித்துக் கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்