சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு அரசு நிர்ணயிக்கும் கட்டணம்!
அந்தந்த மாநில அரசுகள் நிர்ணயிக்கும் கட்டணத்தையே சி.பி.எஸ்.இ., பள்ளிகள் பின்பற்ற வேண்டும் என்று சென்ட்ரல் போர்டு ஆப் செகண்டரி எஜுக்கேஷன் (சி.பி.எஸ்.இ.) அண்மையில் வெளியிட்ட சுற்றறிக்கையில் அறிவுறுத்தியுள்ளது. இந்த சுற்றறிக்கை, நாடு முழுவதும் உள்ள சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்து கர்நாடக மாநில தொடக்கக் கல்வித்துறைக்கு கடிதம் அனுப்பப்பட்டதாகத் தெரியவில்லை. இதுகுறித்து தகவல் கிடைத்ததும், அமைச்சரிடம் விவாதித்து சட்டரீதியான ஆலோசனைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது என்று கர்நாடக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு தனி கட்டண நிர்ணயம் செய்வது தொடர்பாக தமிழ்நாடு, ஆந்திர மாநிலங்கள் பணிகளைத் தொடங்கியுள்ளன.