உள்ளூர் செய்திகள்

பள்ளி, கல்லுாரிகளில் சுதந்திர தின விழாக்கள்

மதுரை மாவட்ட பள்ளி, கல்லுாரிகளில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.* மதுரை கிருஷ்ணம்மாள் ராமசுப்பையர் பள்ளியில் நிர்வாக அலுவலர் செல்வக்குமார் கொடியேற்றினார். உடற்கல்வி ஆசிரியர்கள் சக்திபிரகாஷ், தசரதி மற்றும் அலுவலர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி பங்கேற்றனர்.* மதுரை சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லுாரியில் முதல்வர் (பொறுப்பு) சுஜாதா கொடியேற்றினார். ஆர்.எல். இன்ஸ்டிடியூட்ஸ் ஆப் மேனேஜ்மென்ட் ஸ்டடீஸில் ஆலோசகர் சுப்பிரமணியன் கொடியேற்றினார். ஆசிரியர்கள், அலுவலர்கள் பங்கேற்றனர்.* மதுரை காமராஜ் பல்கலையில் துணைவேந்தர் கிருஷ்ணன் கொடியேற்றினார். பதிவாளர் வசந்தா, ஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றி பெற்ற மாணவி பூர்ணசுந்தரி, பேராசிரியர்கள், சிண்டிகேட் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.* முதன்மை கல்வி அலுவலகத்தில் சி.இ.ஓ., சுவாமிநாதன் கொடியேற்றினார். டி.இ.ஓ., வளர்மதி, ஏ.டி.பி.சி., திருஞானம், நேர்முக உதவியாளர்கள் சின்னதுரை, ரகுபதி, விசு பங்கேற்றனர்.* புதுார் மேரிஆன் மெட்ரிக் பள்ளியில் தலைவர் ஜெயபால் கொடியேற்றினார். மாணவர்கள் ஆன்லைன் வழியாக விழாவை காண ஏற்பாடு செய்யப்பட்டது.* அ.வல்லாளபட்டி அரசு மேல்நிலை பள்ளியில் தலைமையாசிரியர் கிறிஸ்டோபர் ஜெயசீலன் தலைமையில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மகேந்திரன் கொடியேற்றினார். கிராம கல்விக் குழு செயலாளர் கலிங்கமலை, உதவி தலைமையாசிரியர் வாசிமலை முன்னிலை வகித்தனர். ஆசிரியர்கள் சங்கரலிங்கம், மனோகரன், இசக்கிபாண்டி பங்கேற்றனர்.* சக்கிமங்கலம் அரசு உயர்நிலை பள்ளியில் தலைமையாசிரியர் ஆத்மநாதன் தலைமையில் கிழக்கு ஊராட்சி ஒன்றிய தலைவர் நாகலட்சுமி கொடியேற்றினார். ஊராட்சி தலைவர் நுார்முகமது, துணை தலைவர் ரகமத்துல்லா, ஆசிரியை கவிதா பங்கேற்றனர்.* கொண்டபெத்தான் நடுநிலைப்பள்ளியில் ஊராட்சி தலைவர் சீமான் கொடியேற்றினார். தலைமையாசிரியர் தென்னவன் முன்னிலை வகித்தார். துணை தலைவர் பாண்டி, செயலர் குமரன் விழா ஏற்பாடுகளை ஆசிரியர்கள் பீட்டர், விஜயலட்சுமி, உமாமகேஸ்வரி, ராமலட்சுமி செய்தனர்.* யா.ஒத்தக்கடை துவக்கப்பள்ளியில் ஊராட்சி தலைவர் முருகேஸ்வரி கொடியேற்றினார். கொரோனா தடுப்பு முன்களப் பணியாளர்கள் கவுரவிக்கப் பட்டனர். தன்னார்வலர் பாரதிதாசன் மரக்கன்றுகள் வழங்கினார். தலைமையாசிரியை ஜீவா, ஆசிரியர்கள் மோசஸ், ஹேமமாலினி, ராஜேஸ்வரி, ஜெயந்தி பங்கேற்றனர்.* வேடர்புளியங்குளம் அரசு உயர்நிலை பள்ளியில் தலைமையாசிரியர் தென்கரை முத்துப்பிள்ளை கொடியேற்றினார். ஊர்த் தலைவர் கண்ணன், ஆசிரியர் விஜயசாரதி பங்கேற்றனர். மாணவர்களுக்கு அங்கயர்கண்ணி குடியிருப்போர் நலச் சங்கத்தினர் பரிசு வழங்கினர்.* மதுரை காமராஜ் பல்கலை கல்லுாரியில் முதல்வர் ஜார்ஜ் கொடியேற்றினார். பேராசிரியர் சிவக்குமார் வரவேற்றார். பேராசிரியர்கள் மோகன், மகேந்திரன், அஹமது உள்ளிட்டோர் பங்கேற்றனர்.* லேடி டோக் கல்லுாரியில் முதல்வர் கிறிஸ்டியானா சிங் கொடியேற்றினார். ஒருங்கிணைப்பாளர் பியூலாஜெயஸ்ரீ வரவேற்றார். பேராசிரியைகள் ஜெஸ்ஸி ஜெபசெல்வி பங்கேற்றனர்.* ரயிலார் நகர் ஆல்வின் மெட்ரிக் பள்ளியில் கல்வி குழும செயலாளர் சுரேஷ் கொடியேற்றினார். தாளாளர் தேவன்குமார், பள்ளி துணை முதல்வர் காஞ்சனா மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர். துாய்மை பணியாளர்கள் கவுரவிக்கப்பட்டு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன.* அமெரிக்கன் கல்லுாரியில் முதல்வர் தவமணி கிறிஸ்டோபர் கொடி ஏற்றினார். பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.* வீரபாண்டி மதுரை மேற்கு ஒன்றிய துவக்க பள்ளி சுதந்திர தின விழாவில் ஊராட்சி தலைவர் சுகப்பிரியா கொடியேற்றினார். துாய்மை பணியாளர்கள் கவுரவிக்கப்பட்டனர்.* சேர்மத்தாய் வாசன் மகளிர் கல்லுாரி விழாவில் தலைவர் மாரிஸ்குமார், முதல்வர் கார்த்திகாராணி, செயலாளர் கரிக்கோல்ராஜ், தாளாளர் ஜெயக் குமார், நிர்வாக குழு உறுப்பினர் சுக ஜிவிதா, முன்னாள் துணை தலைவர் செல்வராஜன், நாடார் மஹாஜன சங்க துணை தலைவர் முருகேசன், அரசு மருத்துவமனை டாக்டர் சுமதி பங்கேற்றனர்.* எஸ்.பி.ஜெ., மெட்ரிக் பள்ளியில் செயலாளர் பழனிசாமி கொடியேற்றினார். தாளாளர் அபர்ணா, நிர்வாக அறங்காவலர்கள் பங்கேற்றனர்.* எஸ்.பி.ஓ.ஏ., பள்ளி விழாவில் தாளாளர் செந்தில் ரமேஷ், முதல்வர் சீதாலட்சுமி பங்கேற்றனர். இணையவழி சுதந்திர தின போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப் பட்டது. அறிவியல் கருத்தரங்கில் துறை தலைவர் ஷீலா சாந்தி, அருளானந்தர் கல்லுாரி ஓய்வு பெற்ற உதவி பேராசிரியர் சாலமன் பெர்னாட்ஷா பேசினார். ஆசிரியை பிரியா நன்றி கூறினார்.* ஆல்வின் மெட்ரிக் பள்ளியில் தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர் சங்க செயலாளர் சுரேஷ் கொடியேற்றினார். தாளாளர் தேவன்குமார், துணை முதல்வர் காஞ்சனா பங்கேற்றனர்.* டாக்டர் டி. திருஞானம் துவக்கப் பள்ளி விழாவில் பள்ளி செயலர் சதாசிவம், தலைவர் சுரேந்திரன், துணை தலைவர் உதயகுமார், தலைமை ஆசிரியர் சரவணன், உறவின் முறை நிர்வாகிகள் ரமேஷ் குமார், மோகன்ராஜ், சுரேஷ் ராஜ்குமார், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.* கொடிமங்கலம் அரசு உயர்நிலை பள்ளி விழாவில் தலைமை ஆசிரியர் பாஸ்கரன், ஊராட்சி தலைவர் உமாதேவி பங்கேற்றனர். துாய்மை பணியாளர் ராஜலட்சுமி கவுரவிக்கப்பட்டார். ஆசிரியை விஜயலட்சுமி நன்றி கூறினார்.* அலங்காநல்லுார் ஒன்றியம் கீழ சின்னம்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளி விழாவில் ஊராட்சி தலைவர் ரமேசன், தண்ணீர் தண்ணீர் அமைப்பு செயலாளர் ரவி, ஒளிரும் மதுரை அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் துரை விஜயபாண்டியன், துணை ஊராட்சி தலைவர் தர்மராஜ் பங்கேற்றனர்.* அத்யாபனா பள்ளி விழா யூ டியூப்பில் நேரடியாக ஒளிபரப்பானது.அகாடமிக் டீன் விசேஷ் அய்யர், தாளாளர் அருணா, முதல்வர் ரின்ஸி ரோஸ் பங்கேற்றனர். ஆஸி., கேனோக் பிரைமரி பள்ளி முதல்வர் மைக்கேல் பிளாக் ஆன்லைன் வழி பங்கேற்றார்.* கேப்ரன்ஹால் பெண்கள் பள்ளியில் தாளாளர் மார்த்தாண்டன் தாமஸ், தலைமை ஆசிரியர் பார்ச்சூன் பொன்மலர் ராணி, போலீஸ் உதவி கமிஷனர் ஜஸ்டின் பிரபாகரன் பங்கேற்றனர்.* அலங்காநல்லுார் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலை மேல்நிலைப்பள்ளி விழாவில் ஆலை மேலாண்மை இயக்குனர் செந்தில்குமாரி கொடி ஏற்றினார். ஏற்பாடுகளை பள்ளி செயலாளர் பாலன், தலைமையாசிரியர் ஜான்ஸன் மனோகரன் மற்றும் ஆசிரியர்கள் செய்தனர்.உசிலம்பட்டி* நாடார் சரஸ்வதி மெட்ரிக் பள்ளியில் பா.ஜ., மாநில மருத்துவ அணித்தலைவர் விஜயபாண்டியன் கொடி ஏற்றினார். பள்ளி தலைவர் தெய்வேந்திரன், செயலாளர் ஜெயராஜ் மற்றும் ஆசிரியர் கள் பங்கேற்றனர்.எழுமலை* எழுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பெற்றோர் ஆசிரியர்கழகத்தலைவர் முத்தையா கொடி ஏற்றினார். பொருளாளர் பக்ரூதீன், தலைமை ஆசிரியர் சாம்பிரசாத்ராஜா மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.* பாரதியார் மெட்ரிக் பள்ளியில் தாளாளர் பொன்கருணாநிதி கொடி ஏற்றினார். முதல்வர் ஆறுமுகசுந்தரி, ஆசிரியர்கள் பங்கேற்றனர்.* தர்மவித்யாபவன் பள்ளியில் முதல்வர் மேகலா முன்னிலையில் தாளாளர் பொன்கருணாநிதி கொடி ஏற்றினார். ஹரிசன் பள்ளியில் தலைமை ஆசிரியர் வளர்மதி முன்னிலையில் பள்ளி நிர்வாகி வரதராஜன் கொடி ஏற்றினார்.* சின்னக்கட்டளை பாரதியார் மெட்ரிக் பள்ளியில் முதல்வர் சவுந்திரா முன்னிலையில் பள்ளி நிர்வாகி பொன் திருமலைராஜன் கொடி ஏற்றினார்.* விஸ்வ வித்யாலயா மெட்ரிக் பள்ளியில் தாளாளர் பாண்டியன் கொடி ஏற்றினார். முதல்வர் முத்துவேல், பள்ளி நிர்வாகிகள் முருகன், அருள்குமார், மதன்குமார், நிர்வாக அலுவலர் அம்ஜத் பங்கேற்றனர்.* விவேகானந்தா நடுநிலைப்பள்ளியில் பள்ளித் தலைவர் பெருமாள் தலைமையில் செயலாளர் சிவானந்தா கொடி ஏற்றினார். தலைமை ஆசிரியை பாண்டிச்செல்வி மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.மள்ளப்புரம்* மள்ளப்புரம் திருவள்ளுவர் கல்வியியல் கல்லூரியில் நிர்வாகி ராமராஜ் தலைமையில் நிர்வாகி சுப்பிரமணி கொடி ஏற்றினார். முதல்வர் கருப்பசாமி, ஆசிரியர்கள் பங்கேற்றனர்.* திருவள்ளுவர் மகளிர் கலை அறிவியில் கல்லூரியில் நிறுவனர் ராமகிருஷ்ணன் தலைமையில் முதல்வர் செல்வகுமாரி முன்னிலையில் நிர்வாகி செல்வராஜ் கொடி ஏற்றினார்.* திருவள்ளுவர் பாலிடெக்னிக் கல்லூரியில் நிர்வாகி பெருமாள் தலைமையில் முதல்வர் சுபாராஜன் முன்னிலையில் நிர்வாகி சென்னகிருஷ்ணன் கொடி ஏற்றினார். மெட்ரிக் பள்ளியில் நிர்வாக அலுவலர் சந்திரன் தலைமையில் முதல்வர் தனபாக்கியம் முன்னிலையில் நிர்வாகி லோகநாதன் கொடி ஏற்றினார்.திருப்பரங்குன்றம்* பெருங்குடி சரஸ்வதி நாராயணன் கல்லுாரியில் முதல்வர் கண்ணன் கொடியேற்றினார். பேராசிரியர்கள் பங்கேற்றனர்.* கேந்திரிய வித்யாலயா பள்ளியில் முதல்வர் ஜெரால்டு தலைமையில் தஞ்சை கலெக்டர் அலுவலக துணை தணிக்கை அலுவலர் ஜெயபாண்டியன் கொடியேற்றினார்.* திருநகர் முத்துத்தேவர் முக்குலத்தோர் மேல்நிலைப் பள்ளியில் தலைவர் சரவணன் கொடியேற்றினார். தலைமை ஆசிரியர் ஆனந்த் வரவேற்றார். கொரோனா தடுப்பில் ஈடுபட்ட பணியாளர்களுக்கு செயலாளர் கண்ணன் மரியாதை செய்தார்.* விரகனுார் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் ஊராட்சி தலைவர் சந்திரன் கொடியேற்றினார். துணை தலைவர் கல்யாணி, தலைமை ஆசிரியர் கண்மணி, ஆசிரியர்கள் சித்ராதேவி, பிரமிளா, தேன்மொழி, அழகுமீனாள், விஜயலட்சுமி பங்கேற்றனர். ஆசிரியர் பூர்ணவள்ளி நன்றி கூறினார். * அமிர்த வித்யாலயம் பள்ளியில் முதல்வர் சசிரேகா கொடியேற்றினார். ஆசிரியர் சத்யபாமா வரவேற்றார். ஆசிரியர் விஜி நன்றி கூறினார்.* ஆனந்த் நர்சரி, பிரைமரி பள்ளியில் தலைமை ஆசிரியர் ஜெயலட்சுமி கொடியேற்றினார். ஆசிரியர் வசந்தகுமாரி வரவேற்றார்.* திருநகர் சி.எஸ்.ஆர்., நினைவு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் முதன்மை முதல்வர் மாறன் தேசிய கொடியேற்றினார். முதல்வர் வித்யா விசாலாட்சி மற்றும் ஆசிரியர் பங்கேற்றனர்.பேரையூர்* எஸ்.கோட்டைப்பட்டி பராசக்தி மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் ஜெக தீசன் கொடியேற்றினார். பராசக்தி கல்வியியல் கல்லுாரியில் துணை முதல்வர் மணிகண்டன் கொடியேற்றினார். கே.கே.ஜி., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தாளாளர் கமாட்சி கொடியேற்றினார்.* அத்திபட்டி ராமையா நாடார் மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் முத்தழகு கொடியேற்றினார். அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் கிருஷ்ணன் கொடியேற்றினார்.* எஸ்.கீழப்பட்டி அரசு ஆதிதிராவிடர் நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் சுமதி கொடியேற்றினார். ஆசிரியர்கள் மாணவிகளும் கலந்து கொண்டனர்.சோழவந்தான்* திருவேடகம் விவேகானந்த மேல்நிலைப்பள்ளியில் செயலர் சுவாமி பரமானந்தா தலைமை வகித்தார். ஆசிரியர் பால்ராஜ் வரவேற்றார். தலைமை ஆசிரியர் மாதவன் கொடி ஏற்றினார்.* திருவேடகம் விவேகானந்த கல்லுாரிசெயலர் சுவாமி விவேகானந்தர் தலைமை வகித்தார். முதல்வர் வெங்கடேசன் வரவேற்றார். மதுரை தன்வந்திரி நிலைய தலைவர் பிரேம்வேல் கொடி ஏற்றினார்.* சோழவந்தான் எம்.வி.எம்., கலைவாணி மெட்ரிக் பள்ளியில் குழும தலைவர் மணிமுத்தையா தலைமை வகித்தார். நிர்வாகி வள்ளிமயில் முன்னிலை வகித்தார். முதல்வர் விஜயா வரவேற்றார். பள்ளி தாளாளர் மருதுபாண்டியன் கொடியேற்றினார்.* காமராஜ் மெட்ரிக் பள்ளி தாளாளர் பென்சாம் தலைமை வகித்தார். தலைவர் சிவபாலன், முதல்வர் கலைவாணி முன்னிலை வகித்தனர். முன்னாள் ராணுவ வீரர் பால்சிங் கொடி ஏற்றினார்.* முள்ளிப்பள்ளம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் (பொறுப்பு) சந்திரன் தலைமையில் பெற்றோர் ஆசிரிய கழக தலைவர் அருணாச்சலம் கொடி ஏற்றினார். ஊராட்சி தலைவர் பழனிவேல், துணை தலைவர் ராஜா, உறுப்பினர் கார்த்திகாயிணி, பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர் மார்நாட்டான், ஆசிரியை உமாவதி பங்கேற்றனர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்