உள்ளூர் செய்திகள்

மாற்றுத் திறனாளிகளுக்கு சேவை செய்தோருக்கு விருது

சென்னை; மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக, மிகச் சிறந்த சேவை புரிந்தோருக்கான, தமிழக அரசின் விருதுகளை, நேற்று சுதந்திர தின விழாவில், முதல்வர் இ.பி.எஸ்., வழங்கினார்.சென்னை, மயிலாப்பூரில் உள்ள, சி.எஸ்.ஐ., காது கேளாதோர் மேல்நிலைப் பள்ளிக்கு, சிறந்த தொண்டு நிறுவனத்துக்கான விருது; சேலம் மாவட்டம், ஜாகிர் அம்மா பாளையத்தைச் சேர்ந்த, டாக்டர் சியாமளாவிற்கு, சிறந்த மருத்துவருக்கான விருது. மாற்றுத் திறனாளிகளுக்கு அதிக அளவில் வேலைவாய்ப்பு அளித்த, தனியார் நிறுவனத்திற்கான விருது, சக்தி மசாலா நிறுவனத்திற்கும் வழங்கப்பட்டன.திருச்சி, திருமலை பகுதியை சேர்ந்த சாந்தகுமாருக்கு, சிறந்த சமூக பணியாளர் விருது வழங்கப்பட்டது. சிறப்பாக செயல்படும், சிறந்த மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்கான விருது, சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்கு வழங்கப்பட்டது. மகளிர் நலனுக்காக, சிறப்பாக தொண்டாற்றிய, சிறந்த சமூக சேவகர் விருது, கோவையை சேர்ந்த கோதனவள்ளிக்கும், சிறந்த நிறுவனத்திற்கான விருது, கடலுார் மாவட்டத்தைச் சேர்ந்த, கிராமப்புறக் கல்வி மற்றும் பொருளாதார மேம்பாட்டு மையத்திற்கும் வழங்கப்பட்டது.வேலுாருக்கு விருதுசிறந்த மாநகராட்சியாக தேர்வு செய்யப்பட்ட, வேலுாருக்கு, 25 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. சிறந்த நகராட்சிகளில், முதல் பரிசு பெற்ற விழுப்புரத்திற்கு, 15 லட்சம் ரூபாய், இரண்டாம் பரிசு பெற்ற கரூருக்கு, 10 லட்சம் ரூபாய், மூன்றாம் பரிசு பெற்ற, கூத்தநல்லுாருக்கு, 5 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. சிறந்த பேரூராட்சிகளாக தேர்வு செய்யப்பட்ட, சேலம் மாவட்டம், வனவாசி; தேனி மாவட்டம், வீரபாண்டி; கோவை மாவட்டம், மதுக்கரை பேரூராட்சி, முறையே முதல் மூன்று இடங்களை பிடித்தன. 4 இளைஞர்களுக்கு முதல்வர் விருதுஇந்த ஆண்டுக்கான, முதல்வரின் மாநில இளைஞர் விருது, மதுரையை சேர்ந்த அருண்குமார், கடலுாரை சேர்ந்த ராம்குமார், புவனேஸ்வரி; சென்னையை சேர்ந்த அம்பேத்கர் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.கொரோனா தடுப்பு வீரர்களுக்கு விருதுகொரோனா தடுப்பு பணிகளில், முன்களப் பணியாளர்களாக பணியாற்றிய, ஆறு துறைகளைச் சேர்ந்த, 27 பணியாளர்கள், சுதந்திர தின விழாவில் கவுரவிக்கப்பட்டனர். அவர்களுக்கு, தங்க முலாம் பூசிய பதக்கம் மற்றும் நன்மதிப்பு சான்றிதழை, முதல்வர் வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்