உள்ளூர் செய்திகள்

எஸ்.எம்.எஸ்., வாயிலாக இன்ஜி., கல்லுாரி ரிசல்ட்

சென்னை; இன்ஜினியரிங் கல்லுாரிகளில், ரத்து செய்யப்பட்ட செமஸ்டர் தேர்வுகளுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. ஊரடங்கால், கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளில், இறுதியாண்டு தவிர மற்ற மாணவர்களுக்கு, செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. ஏற்கனவே நடந்த, செமஸ்டர் தேர்வுகளின் மதிப்பெண் அடிப்படையில், ரத்து செய்யப்பட்ட செமஸ்டர் தேர்வுக்கு மதிப்பெண் நிர்ணயிக்கப்படும் என, அறிவிக்கப்பட்டது. இந்த வழிகாட்டு முறைகளின் அடிப்படையில், சென்னை பல்கலை இணைப்பில் உள்ள, கலை, அறிவியல் கல்லுாரிகளுக்கான செமஸ்டர் மதிப்பெண் ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.இதைத்தொடர்ந்து, அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள இன்ஜினியரிங் கல்லுாரிகளின் செமஸ்டர் தேர்வு மதிப்பெண் விபரங்களை, பல்கலையின் தேர்வுத் துறை வெளியிட்டுள்ளது. மாணவர்களின் மொபைல் போன் எண்ணில் குறுஞ்செய்தியாகவும், பல்கலையின் தேர்வுத் துறை தயாரித்துள்ள செயலி வழியாகவும், மதிப்பெண் விபரங்கள் அனுப்பப்பட்டுள்ளன. மதிப்பெண்களை பொறுத்தவரை, கிரேடு முறை அடிப்படையில், மாணவர்களை வகைப்படுத்தி பட்டியலிடப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்