உள்ளூர் செய்திகள்

தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கைக்கு அழைப்பு

தமிழக தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர்கள் சேர்க்கை தொடங்கியுள்ளது. ஆன்லைன் மூலமாக செப்., 15 வரை விண்ணப்பிக்கலாம்.மின்சாரப் பணியாளர், பொருத்துநர், கம்மியர், மெக்கானிக், கணினி இயக்குபவர் மற்றும் திட்டமிடுதல் உதவியாளர் பிரிவுகளில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களும், பற்றவைப்பவர், ஆடை தயாரித்தல் பிரிவுகளில் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் சேரலாம்.www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பிக்க இயலாதவர்கள் மாவட்ட தொழிற்பயிற்சி மையம், வேலை வாய்ப்பு தொழில் நெறி வழிகாட்டும் மையம், மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் மூலமாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக்கட்டணம் 50 ரூபாயை ஆன்லைனில் செலுத்த வேண்டும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்