உள்ளூர் செய்திகள்

வீட்டுப்பாடத்தை குறைக்க பள்ளிகளுக்கு ஐகோர்ட் யோசனை

சென்னையை சேர்ந்த சரண்யா என்பவர் தாக்கல் செய்த மனுவில், &'பள்ளி மாணவர்களுக்கு, ஆன்லைனில் பாடங்கள் நடத்தப்படுகின்றன. &'மொபைல் போன், மடிக்கணியை, மாணவர்கள் பயன்படுத்துகின்றனர். அப்போது, ஆபாச இணையதளங்களால் கவனம் சிதைவதற்கு வாய்ப்பு உள்ளது.முறையான வழிமுறைகளை ஏற்படுத்தாமல், ஆன்லைனில் வகுப்புகள் நடத்த, தடை விதிக்க வேண்டும்&' என கூறப்பட்டுள்ளது. வழக்கறிஞர் விமல் மோகன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், &'ஆன்லைன் வகுப்புகளால், மாணவர்களுக்கு கண் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.&' அதனால், ஆறு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு, இரண்டு மணி நேரம் மட்டும் வகுப்புகள் நடத்த உத்தரவிட வேண்டும்&' என கோரியிருந்தார். இதேபோன்று, பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இம்மனுக்கள், நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஹேமலதா அடங்கிய, &'டிவிஷன் பெஞ்ச்&' முன், விசாரணைக்கு வந்தன. மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் வாதாடியதாவது:ஆன்லைன் வகுப்புகள் நடக்கும் போது, ஆபாச இணையதளங்களில் மாணவர்கள் நுழைவதை தடுக்க, எந்த விதிமுறைகளும் இல்லை.எப்போதும், அவர்களை கண்காணித்து கொண்டிருக்க முடியாது. ஒரே நாளில், 62 சீன செயலிகளுக்கு, மத்திய அரசு தடை விதித்தது. ஆனால், ஆபாச இணையதளங்களுக்கு தடை விதிக்க, நடவடிக்கை எடுப்பது இல்லை.கிராமப்புறங்களில், 100க்கு, 44 சதவீதம்; நகர்ப்புறங்களில், 65 சதவீதம் பேரிடம் இணையதள வசதி உள்ளது. அனைவருக்கும் இந்த கல்வி சேர்வதில்லை. இது, சமச்சீர் கல்வி கொள்கைக்கு எதிரானது. நான்கு மணி நேர வகுப்புகள், ஆன்லைனில் நடத்தினாலும், அதன்பின் வழங்கப்படும் வீட்டுப் பாடங்களும், கணினி வழியாக தான் மேற்கொள்ள வேண்டியதுள்ளது.அரசு பள்ளிகளை போல, தனியார் பள்ளிகளும், &'டிவி&' வழியாக பாடங்களை நடத்த வேண்டும்.இவ்வாறு, அவர்கள் வாதாடினர்.இதையடுத்து நீதிபதிகள், &'தனியார் பள்ளிகள், &'டிவி&' வழியாக பாடங்கள் நடத்த சாத்தியமில்லை. வீட்டுப்பாடங்கள், பாடத்திட்டங்களை, பள்ளிகள் குறைக்கலாம்&' என கூறினர். விசாரணையை, வரும், 24ம் தேதிக்கு, நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்