உள்ளூர் செய்திகள்

அரசு கல்லுாரி நேரம் தனியாருக்கும் நீட்டிப்பா?

திருவண்ணாமலை மாவட்டம், புளியம்பட்டியைச் சேர்ந்த, கே.சுந்தரம் தாக்கல் செய்த மனு:அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகள், காலை, 9:30 முதல் மாலை, 4:30 மணி வரை இயங்க வேண்டும் என, கல்லுாரி கல்வி இயக்குனரகம் கேட்டு கொண்டதை, அரசு ஏற்று, ஜூலையில் உத்தரவு பிறப்பித்தது.இந்த உத்தரவு, கல்வி தரத்தை மேம்படுத்தும்; மாணவர்கள் விளையாட்டு போட்டிகளில் ஈடுபடவும், உடல் நலத்தை பேணவும் உதவும்.தமிழகத்தில், 1,358 கல்லுாரிகள் உள்ளன. 109 அரசு கல்லுாரிகள்; 162 அரசு உதவி பெறும் கல்லுாரிகள்; 24 பல்கலை உறுப்பு கல்லுாரிகள்; 1,063 தனியார் கல்லுாரிகள் உள்ளன.அரசு உத்தரவில், உதவி பெறும் கல்லுாரிகள் மற்றும் தனியார் கல்லுாரிகள் பற்றி குறிப்பிடப்பட வில்லை.இந்த கல்லுாரிகளில், காலை, 8:00 முதல் பகல், 1:00 மணி வரை ஒரு பகுதி, பிற்பகல், 2:00 முதல் மாலை, 5:30 மணி வரை, ஒரு பகுதி என, இரண்டு வகையான நேர அட்டவணை கடைபிடிக்கப்படுகிறது.அரசு பிறப்பித்த உத்தரவு, தனியார் கல்லுாரிகள் மற்றும் அரசு உதவி பெறும் கல்லுாரிகளுக்கு பொருந்தவில்லை. எனவே, இந்த உத்தரவு, அரசு கல்லுாரிகளுக்கும், மற்ற கல்லுாரிகளுக்கும் இடையே பாகுபாடு காட்டுவதாக உள்ளது. அரசு கல்லுாரிகள் இயங்கும் நேரத்தை, தனியார் கல்லுாரிகள் மற்றும் அரசு உதவி பெறும் கல்லுாரிகளுக்கும் அமல்படுத்த வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.மனு, நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஹேமலதா அமர்வு முன், விசாரணைக்கு வந்தது.அரசு தரப்பில் சிறப்பு பிளீடர் மனோகரன் ஆஜராகி, &'&'முதல் கட்டமாக, அரசு கல்லுாரிகளுக்கு அமல்படுத்துகிறோம். இதுகுறித்து, அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும்,&'&' என்றார். இதையடுத்து, அறிக்கை அளிக்க உத்தரவிட்டு, விசாரணையை, வரும், 28க்கு, நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்