நீட் தேர்வு ரத்து செய்ய வலியுறுத்தல்
சென்னை: இன்று நீட் தேர்வு நடைபெறவுள்ள நிலையில், மதுரை மாணவி ஜோதிகா ஸ்ரீதுர்கா தற்கொலை செய்து கொண்டதற்கு, கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்தும், நீட் தேர்வு ரத்து செய்ய வேண்டும் என, கூறி உள்ளனர்.தி.மு.க., தலைவர் ஸ்டாலின்:நீட் தேர்வு, மாணவ சமுதாயத்தின் மனங்களை நிலை குலைய வைப்பதாக இருப்பதை அனிதா முதல் ஜோதிஸ்ரீ துர்கா மரணம் வரை உணர முடிகிறது. மாணவி ஜோதிஸ்ரீதுர்கா பேசிய ஆடியோ, நீட் தேர்வில் கோர முகத்தை காட்டுகிறதுபா.ம.க., நிறுவனர் ராமதாஸ்:மாணவி ஜோதிஸ்ரீ துர்கா, தற்கொலையால், நீட் தேர்வுக்கு எதிராக மக்கள் புரட்சி வெடிக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை. அதற்கு முன் தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து செய்ய மத்திய அரசு முன் வர வேண்டும்.ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ: நீட் தேர்வு எத்தனை உயிர்களை பலி வாங்க போகிறதோ? நீட் தேர்வு ரத்து செய்தால் தான், மாணவ, மாணவிகளின் உயிர்பலியை தடுக்க முடியும்; சமூக நீதியையும் நிலை நாட்ட முடியும்.த.மா.கா., தலைவர் வாசன்:மாணவி ஜோதிஸ்ரீ துர்கா, நீட் தேர்வுக்கு தயாராகி கொண்டு இருந்த நேரத்தில் தாம் தோல்வியடைந்து விடுவோம் என்ற பயத்தில் மன உளச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்டது மிகவும் வேதனை அளிக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.