அகலக்கால் வேண்டாம்! தொழில் முனைவோருக்கு அட்வைஸ்
தொழில்துவங்கிய உடனேயே, அதிக லாபத்தை எதிர்பார்க்க கூடாது என, கருத்தரங்கில், புதிய தொழில்முனைவோருக்கு அறிவுரை கூறப்பட்டது.திருப்பூர் நிப்ட்-டீ கல்லுாரி மற்றும் தொழில்முனைவோர் திறன் மேம்பாட்டு பயிற்சி மையம் சார்பில், நிதி மேலாண்மை கருத்தரங்கம் ஆன்லைனில், நேற்றுமுன்தினம் நடந்தது.சென்னை திறன் மேம்பாட்டு பயிற்சி மைய பயிற்சியாளர் மகாதேவன் பேசியதாவது:புதிய தொழில்முனைவோர், சிறந்த பட்டைய கணக்காளர்களை பணி அமர்த்தவேண்டும். வரவு, செலவு மதிப்பிடும் நுணுக்கங்களை தெரிந்துவைத்திருக்கவேண்டும். தொழில் துவங்கிய உடனேயே அதிக லாபம் எதிர்பார்க்க கூடாது; அகலக்கால் வைத்தால், பெரும் நஷ்டத்தை சந்திக்க நேரிடும்.வங்கிகளுடன் நட்புறவு பேண வேண்டும்.நிர்ணயிக்கப்பட்ட மற்றும் தேவைக்கு அதிகமான தொகையை கடனாக பெறக்கூடாது. இதனால், திருப்பி செலுத்துவதில் சிக்கல் ஏற்படும். &'ஸ்டார்ட் அப்&' இந்தியா திட்டத்தில், பெண் தொழில்முனைவோருக்கான பல்வேறு திட்டங்கள் உள்ளன. அவற்றை பெண்கள் முழுமையாக பயன்படுத்திக்கொள்ளவேண்டும். அரசு மானியத்துடன் தொழில் துவங்கவேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.திருப்பூர் பகுதி புதிய தொழில்முனைவோர் பங்கேற்றனர்; நிதி சார்ந்த தங்கள் சந்தேகங்களை கேட்டு தெளிவு பெற்றனர்.