உள்ளூர் செய்திகள்

தமிழ்நாடு வேளாண் பல்கலை பட்டமளிப்பு விழா

கோவை: தமிழ்நாடு வேளாண் பல்கலை பட்டமளிப்பு விழா, கடந்த மார்ச் மாதம் நடப்பதாக இருந்தது. கொரோனா பரவல் காரணமாக ரத்து செய்யப்பட்டது. டிச., 17ல் பட்டமளிப்பு விழா நடக்கிறது. இதில் பங்கேற்க, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, 16ம் தேதி கோவை வருகிறார். பட்டமளிப்பு விழாவில், கவர்னர் பன்வாரிலால் புரோஹித், அமைச்சர்கள் பங்கேற்கின்றனர். விழாவில் பட்டம் பெறும் மாணவர்கள், குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே அனுமதிக்கப்பட உள்ளனர். முக்கிய பிரமுகர்கள் மட்டும் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்